ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சம்பந்தனுடன் முரண்பட விரும்பவில்லை.. ஆமாம் போட்டு அடிமைகளாக இருக்கவும் இரும்பவில்லை.. – மஹிந்த..

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தனுடன் முரண்பட விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவிக்கையில்;

“.. பாராளுமன்றத்தில் நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகவே தொடர்ந்து செயற்படுகின்றேன். தற்போது எதிரணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை நாம் பெற்றுள்ளோம்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எம்மைத் தேடி வந்தது. எவரிடமும் மண்டியிட்டு இந்தப் பதவியை நாம் பெறவில்லை. சம்பந்தனின் புலம்பல் சரியா? பிழையா? என்பதை அவரின் மனச்சாட்சியே சொல்லட்டும். நாங்கள் அவருடன் முரண்பட விரும்பவில்லை.. எல்லாவற்றுக்கும் ஆமாம் போட்டு அடிமைகளாக இருக்கவும் நாம் இரும்பவில்லை. பலமான எதிர்க்கட்சியாக திகழ்வோம்..”

Related posts

நீதிமன்ற உத்தரவுகளை குப்பையில் வீசிய மகிந்த விமலிடம் சிக்காமல் தப்பிய அமைச்சர்

wpengine

வாந்தி எடுத்ததால், மாணவி கர்ப்பிணி என பாடசாலை நிர்வாகம் தீர்மானம்.. – மருத்துவ பரிசோதனையில் தோல்வி..

wpengine

“இனவாதம், மதவாதம்” மற்றும் சமூக வலைத்தளம்: “எந்த கடையில் பொருட்கள் வாங்கினாலும் காசு இருக்க வேண்டுமே…” .. _  ???? ????

wpengine