உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்மாந்துறையில் குழந்தையை கடத்த முயன்ற நபர்: பொது மக்களின் துணிகர செயல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சம்மாந்துறை புஸ்றா மஹல்லா பள்ளிவாசல் அருகில் இன்று(29) குழந்தை ஒன்றினை கடத்த நபரொருவர் முயற்சித்துள்ளார்.

இதன்போது பொதுமக்கள் குறித்த நபரை மடக்கி பிடித்து சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த குழந்தை கடத்தல் சம்பவம் தனி நபரால் மேற்கொள்ளப்பட்டதா? அல்லது ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்டதா? என்ற தகவல்கள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“பொது மக்கள் உங்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடனும் பாதுகாப்புடனும் உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் பாதுகாப்பது உங்கள் கடமை” என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Related posts

இதயத்திற்கு இதயம்´ நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு ஜனாதிபதியால் நிதி அன்பளிப்பு…

wpengine

தடை உத்தரவினை வாபஸ் வாங்கினார் சுஜீவ

wpengine

சஹ்ரான் மற்றும் அவரது மகளின் DNA பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி..

wpengine