உள்நாட்டு செய்திகள்

சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை?

மறைந்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.கே.டி.எஸ் குணவர்தன, தேசியப் பட்டியல் ஊடாக, எம்.பியாக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதவி வெற்றிடங்களை நிரப்புவது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்தாலோசித்து இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரமளவில் குறித்த பதவி வெற்றிடம் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆள் கடத்தல்காரர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள்

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

Azeem Kilabdeen

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine