விளையாட்டு

சர்வதேச கால்பந்தாட்ட சபையின் தலைவர் பதவிக்கான தேர்தலை பிற்போட வேண்டும் என ஐரோப்பிய கால்பந்தாட்ட சபை கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியாக சூழ்நிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்த தேர்தலை பிற்போட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தசாப்தகாலத்திற்கும் மேலாக FIFA அமைப்பில் பல்வேறான ஊழல் இடம்பெற்றதாக தெரிவித்து FIFA உயர் அதிகாரிகள் 9 பேர் உள்ளிட்ட 14 பேர் புதன் அன்று சூரிச்சில் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் FIFA உடனான வரத்தக தொடர்புகள் குறித்து மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக முக்கிய அனுசரணையாளர்களான கொககோலா, அடிடாஸ் மற்றும் விசா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் FIFA தலைவர் பதவிக்கான தேர்தல் திட்டமிட்டபடி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்தாட்ட சபையினால் இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேற்றம்…

wpengine

The Hundred: லசித் மாலிங்க அதிரடி நீக்கம்

wpengine

தில்ஹார லொகுஹெட்டிகே’விற்கு ஐசிசி இடமிருந்து குற்றச்சாட்டு…

wpengine