உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் ஆபத்து!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, நாட்டை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கிறீஸ் நாட்டுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜே.வி.பியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

‘’சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, மீண்டெழுந்த நாடுகள் உலகில் இல்லை. 1998 இல் இருந்து ஆர்ஜன்டீனா 9 தடவைகள் ஐ.எம்.எப்பிடம் கடன் பெற்றுள்ளது.

இந்த 9 தடவைகளும் அந்நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தது. சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று இலங்கை போன்ற சிறிய நாடுகளால் ஒருபோதும் மேலே வரமுடியாது எனவும் கூறினார்.

Related posts

SAITM தனியார் மருத்துவமனை குறித்து அரச மருத்துவ தொழிற்சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

wpengine

நான்கு இணையத்தளங்களுக்கு தடை

wpengine