உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சர்வதேஷ பொலிஸாரால் தேடப்பட்டவர் இலங்கையில் கைது

கடந்த செப்டம்பர் மாதம் மாலைதீவு ஜனாதிபதியின் அதிவேகப் படகில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த 8 பேரில் ஒருவர், நேற்று தெஹிவளை நதிமல பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைதீவு துணை ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளர் என தன்னைக் காட்டிக் கொண்டவரும் சமூக வலைத்தளங்களில் Shumba Gong என அறியப்பட்டவருமான அஹமட் அஸ்ரவ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில், “சிலர் எனது அறைக்கதவை உடைத்துக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். அல்லாஹ் எம்மை காப்பாற்றக் கூடும்” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை பொலிஸார் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்துள்ள போதிலும், எப்போது சந்தேகநபர் மாலைதீவிற்கு நாடு கடத்தப்படுவார் என்பது தொடர்பான எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

Related posts

இன்றைய தினமும் அதிக வெப்பமான காலநிலை

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து ஆராய அமைச்சரவை குழு…

wpengine

முடிவெட்டும் நிலையங்களை திறப்பதற்கான சுற்றறிக்கை

wpengine