உள்நாட்டு செய்திகள்

சவூதியில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை..

சவூதியில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சவூதி கெசட் ஊடகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் புரைதாஹ் (Buraidah) பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை குறித்த இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

42 வயதான குறித்தப் பெண்ணை, 30 வயதான சவூதி பிரஜை ஒருவர், தமது வீட்டுக்குள் வைத்து சுட்டுக் கொன்று, பின்னர் குறித்த சவூதி பிரஜையும் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் சவூதி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப விசாரணைகளில் குறித்த சவூதி பிரஜை மனநலம் குன்றியர் என தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் சவூதி அல் ராஸ் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒன்பதாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து

wpengine

மீண்டும் ஒரு நாள் சேவை

wpengine