உள்நாட்டு செய்திகள்

சவூதிற்கு பணிப் பெண்கள் அனுப்புவதனை உடனடியான நிறுத்த வேண்டும் – அஜித் பீ பெரேரா

சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்கள் அனுப்பப்படுவதனை உடனடியான நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணியாட்களுக்கு குறைந்த சலுகைகளே வழங்கப்படுகின்றமையினால், அந்நாடுகளுக்கு பணியாட்களை அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அதற்கு தேவையான சட்டம் பாராளுமன்றத்தில் வகுக்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

ஸ்ரீ.சு. கட்சியின் விசேட மாநாடு அடுத்த மாதம் 4 ஆம் திகதி கொழும்பில்…

wpengine

தனுஷ்க மற்றும் அணியின் பின்னணிப் படம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine

இன்று முதல் சம்பளம் அதிகரிப்பு

wpengine