உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களுக்கு நேர்முக பரீட்சை…

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களை பிரபல பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சைக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு;ள்ளன.

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானதை தொடர்ந்து. பெற்றோர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்ததாக, கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் சிலவற்றில் இதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பாடசாலைகளில் நேர்முக பரீட்சை இரண்டாம் தவணை ஆரம்பமான பின்னர் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கூடுதலான புள்ளிகளை பெற்ற பாடசாலை மாணவர்கள் நிலவு வெற்றிடங்களுக்கு அமைவாக பாடசாலைகளில் உள்வாங்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் உயர்தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts

அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

இலங்கை கிரிக்கட் தேர்தல் 02 வாரங்களுக்கு பின்…

wpengine

பிணை முறி ஆணைக்குழுவை நியமித்தது எவரையும் பழி வாங்குவதற்கு அல்ல – ஜனாதிபதி…

wpengine