உள்நாட்டு செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் – மேலும் 3 மாத கால அவகாசம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டும் நாளாந்தம் அதிகளவான மக்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வருகைத் தருவதன் காரணமாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

டி.பி.ஏகநாயக்க FCIDக்கு…

wpengine

அஜந்தவின் சாதனையினை இளம் வீரர் குசல் வீழ்த்தி சாதனை..

wpengine

வேலையில்லா பட்டதாரிகள் இன்று(06) ஆர்ப்பாட்டம்…

wpengine