ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிகையலங்கார ‘தன்சல்’

வெசாக் போயா தினம் ஆரம்பமானது முதல், வெசாக் வாரத்தில், நாடளாவிய ரீதியில் பல்வேறான, தன்சல்கள் வழங்கப்பட்டிருந்தன.   இந்நிலையில், மத்திய மாகாண சிகையலங்கார சங்கம், சிகையலங்கார தன்சலை, போயா தினமான கடந்த 10ஆம் திகதி, கண்டி-மெனிஹின்னையில் ஏற்பாடு செய்திருந்தது.  

அந்த, சிகையலங்கார தன்சலுக்கு சென்றிருந்த ஊடகத்துறை முன்னாள் அமைச்சரும், ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியுமான கெஹலிய ரம்புக்வெல, அங்கு இலவசமாக சிகையலங்காரம் செய்துகொண்டார்.  

சுமார் 60 பேர் அங்கம் வகிக்கும், இந்த சங்கத்தை சேர்ந்த அனைவரும், மெனிஹின்ன பஸ் நிலையத்துக்கு ஓரமாக, இந்த தன்சலை சுமார் எட்டுமணிநேரத்துக்கு மேற்கொண்டிருந்தனர். அக்காலப்பகுதிக்குள், பெரும் எண்ணிக்கையிலானோர் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்து, இலவசமாக சிகையலங்காரம் செய்துகொண்டனர் என்று அந்த சங்கத்தின் தலைவர் டப்ளியு.எம். ஹேரத் பண்டார தெரிவித்தார்.  

Related posts

உலக அளவில், லண்டன் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் Instagram முடக்கம்… – #InstagramDown

wpengine

நாமல் – லிமினி சுப மங்களம் [VIDEO]

wpengine

ரஞ்சன் ராமநாயக்கவை எச்சரிக்கின்றோம்.. – சிங்கள ராவய..

wpengine