Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிக்கலில் சஜித் – டளஸ் கூட்டணி..!

(லியோ நிரோஷ தர்ஷன்)

2024 ஆம் ஆண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை மையப்படுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பரந்துப்பட்ட கூட்டணியை அமைப்பதறகு கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூட்டணியை அமைப்பதற்காக அங்கிகாரத்தை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் மீண்டும். கோரியிருந்தார்.

இதற்கு முழுமையான அங்கிகாரம் மத்திய செயற்குழு வழங்கியிருந்த போதிலும் சில நபர்களை இணைத்துக்கொள்வதில் சிக்கல்களை ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

மறுப்புறம் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக செயல்படும் டளஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச, சரித்த ஹேராத் மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழுவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி குறித்து கலந்துரையாடி வருகின்றது.

இந்த கலந்துரையாடல்களின் போது ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி அமைக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தியை தலைமைத்துவமாக கொண்ட கூட்டணியின் பிரதி தலைவர் பதவி டளஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவோ ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய சிரேஸ்ட தலைவர்களோ விரும்ப வில்லை. கூட்டணியில் பிரதி தலைவர் பதவியை கோரி முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் நெருக்கடிகளை சந்தித்திருந்த நிலையில், தேசிய அமைப்பாளர் பதவியை டளஸ் அழகப்பெருமவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி விருப்பம் தெரிவித்துள்ளது.

எனினும் இதனை டளஸ் அழகப்பெரும விரும்பாத நிலையில் கலந்துரையாடல்களில் பங்கேற்காதுள்ளார். ஆனால் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

wpengine

உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…

wpengine

அதிகரித்த வேகத்தில் காற்று வீசும்.. – கடற்படையை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு..

wpengine