உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சினிமா நட்சத்திரங்களுடன் இணைந்து ஆடுகிறார் சங்கக்கார..

இந்தியாவின் சினிமா நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக்கில் ஷேவாக், சங்கக்கார உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டும் பங்கேற்கும், ‘ஆல் ஸ்டார்’ கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தியாவின் அதிரடி மன்னன் ஷேவாக், லாரா, முரளிதரன் என பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்திய சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் தொடரில் ஓய்வு பெற்ற பல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இத்தொடரில் ஜாகிர் கான், பிரைன் லாரா, காலிஸ், ஜாண்டி ரோட்ஸ், சைமண்ட்ஸ், டேனியல் வெட்டோரி, சங்கக்கார,ஷேவாக் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு தொடர்பில் இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

wpengine

04 மாகாணங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine

உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை…

wpengine