உலக செய்திகள்

சிம்பாப்வே நாட்டின் துணைஅதிபராக கான்ஸ்டான்டினோ சிவேங்கா பதவியேற்றார்…

ஆப்ரிக்க நாடான சிம்பாப்வேவின் துணை அதிபராக முன்னாள் இராணுவ ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவேங்கா நேற்று பதவியேற்றுள்ளார்.

ஆப்ரிக்க நாடான சிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே(93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வந்தார். இராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, முகாபேவின் 37 ஆண்டுகால ஆட்சிக்கு இராணுவ புரட்சி மூலம் முடிவு கட்டினார்.

இதையடுத்து முகாபேவால் நீக்கப்பட்ட முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவா, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.

இந்நிலையில், முகாபேவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த முன்னாள் இராணுவ ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவேங்கா, சிம்பாப்வேயின் புதிய துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் நேற்று முறைப்படி பதவியேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

பனாமா ஆவணக் கசிவினது முழுமையான விவரங்கள் இன்று வெளியாகிறது.?

wpengine

மீனவர்களின் கைது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – ஜெயலலிதா

wpengine

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபூ பக்கர் அல் பக்தாதி ஆப்கானிஸ்தானில் தலைமறைவு..?

wpengine