கேளிக்கை

சிம்புக்கு ஜோடி கீர்த்தியா? ஜான்வியா?

சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷா அல்லது ஜான்வியா என்று செய்திகள் வந்த நிலையில் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் நடிகைகள், பின்னணி கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் அல்லது, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இது குறித்து வெங்கட் பிரபு கூறும்போது, ‘நான் தற்போது ‘பார்ட்டி’ படத்தின் பின்னணி வேலைகளில் பிசியாக இருக்கிறேன். சிம்பு படத்தின் ஸ்கிரிப்ட்டை இன்னும் முடிக்க வில்லை. விரைவில் யார் நடிகை என்றும், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலையும் வெளியிடுவேன். அதுவரைக்கும் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என்றார்.

Related posts

ஆண்பால் சார்ந்த களியாட்ட கண்காட்சி நடாத்தி பிராத்திக்கும் இளம் யுவதிகள்… [VIDEO]

wpengine

சூரி ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார் – விக்ரம்…

wpengine

விஜயின் எளிமையினை நேரில் பார்த்து வியந்தேன் – நியூஸிலாந்து மாடல்…

wpengine