ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிம்புவின் புதிய காதல் ஜோடி….

சிம்பு தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் 3 வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தை தொடர்ந்து ‘வாலு’ படத்தை இயக்கி விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் படம் முடிந்தபிறகு இப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஜோடியாக முன்னணி நடிகையை தேர்வு செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது காஜல் அகர்வாலை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானால், சிம்புவுடன் அவர் ஜோடி சேரும் முதல் படம் இதுவாகும். மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது.

Related posts

மே தின கூட்டத்தில் UNP க்கே வெற்றி,

wpengine

பிரதமர் பதவியினை ஏற்கத் தயார்.. அதற்கு காலம் உண்டு.. – ராஜித

wpengine

ஏழைகளுக்கு உதவுங்கள் : சிறையில் இருந்து ரஞ்சன் கடிதம்

wpengine