உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பு வழக்குகள் 2 இலட்சத்தினை தாண்டியது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் 33% சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் முழு நீதித்துறை அமைப்பிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான சுமார் 24,700 வழக்குகள் இருப்பதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

“.. இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களில் உள்ள 29,700 வழக்குகளில், 9,800 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது உயர் நீதிமன்றங்களில் 33% வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள். இந்த நிலைக்கு நாம் வருந்த வேண்டும்.

சட்டத்தால் மட்டும் சமூகத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. சமூக நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்…” என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கான்ஸ்டபிள் பணிநீக்கம்

Azeem Kilabdeen

‘சினோபார்ம்’ தாமதத்திற்கான காரணம்

wpengine

அதிகாரிகளை ஏமாற்றிய நபர் கைது!

News Editor