உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை திணைக்களத்தின் உயர்பதவிகள் சிலவற்றில் மாற்றம்..

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர்பதவிகள் சிலவற்றில் மாற்றம் ஏற்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டிலுள்ள அணைத்து சிறைச்சாலைகளிலும் குறித்த இந்த மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் நால்வர் தப்பி ஓடியமை தொடர்பில் ஆராய, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இவர்கள் சிறைச்சாலை சுவர்களில் துளையிட்டு தப்பிச் சென்ற வேளை, அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுத்த விதம் குறித்து தான் அதிர்ச்சியடைவதாகவும் சுவாமிநாதன் இதன்போது கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கைதிகள் தப்பிச் சென்ற விவகாரத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து விரைவில் அறிக்கையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை

wpengine

முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் உழைப்போம்

wpengine