உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறைச்சாலை வைத்தியர்களை உடன் இடமாற்றம் செய்யுமாறு, அமைச்சர் ராஜித உத்தரவு…

சிறைச்சாலை வைத்தியர்களை உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வாவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே மேற்குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு குறித்த வைத்தியர்கள் உதவி செய்வது குறித்து தெரிய வந்துள்ளது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் – கம்மன்பில

wpengine

ஆயுதம் தாங்கிய முப்படையினர் பாதுகாப்பில்

wpengine

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த புதிய களனி பாலம் மீண்டும் திறக்கப்பட்டது..!

wpengine