உலக செய்திகள்

சிலியின்புதிய ஜனாதிபதியாக செபாஸ்டியன் பினேரா மீண்டும் தேர்வு…

சிலியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரும், முன்னாள் அதிபருமான செபாஸ்டியன் பினேரா வெற்றி பெற்றார்.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

பழமைவாதியும் முன்னாள் அதிபருமான செபாஸ்டியன் பினரா மற்றும் சோசியலிச கட்சியைச் சேர்ந்த அலேஜாந்த்ரோ கைலியர் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், 54 சதவிகித வாக்குகள் பினராவுக்கு பதிவாகின. இதனால், நான்கு ஆண்டுகள் கால இடைவேளைக்கு பின்னர் அவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய பெண் அதிபராக மிச்சேல் பாச்லேட்டின் பின்னணியில் அலேஜாந்த்ரோ இருந்த நிலையில், இம்முறை அவர் நேரடியாக களமிறங்கி தோல்வியை தழுவியுள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, சிலி, கியூபா, ஈக்வேடார், ஹோண்டுராஸ், உருகுவே மற்றும் பாராகுவே ஆகிய நாடுகளில் இடதுசாரிகளே ஆட்சியாளர்களாக இருந்து வந்தனர்.

Related posts

ஜப்பானில் பறவைக்காய்ச்சல் பரவுகிறது – சுமார் 2 லட்சம் பறவைகள் அழிப்பு..

wpengine

வர்த்தக போரைப் கண்டு அஞ்சப்போவதில்லை – சீனா

wpengine

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம்…

wpengine