உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிலியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.3 – சுனாமி எச்சரிக்கை

சிலி நாட்டில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 227 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலாபெல் பகுதியில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் சாண்டியாகோவிலும் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 8.3-ஆக பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தால், சிலியின் அண்டை நாடுகளான மெக்சிக்கோ, பெரு மற்றும் ஹவாய் போன்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலியில் கடந்த 1906ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியிருந்தது. அதன்பின் தற்போது தான் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=1CFa1oRonp8″ width=”560″ height=”315″]

(riz)

Related posts

முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி

wpengine

அரச நிறுவனங்கள் குறித்தான கோப் குழு அறிக்கை நாடாளுமன்றில்..

wpengine

சிறைச்சாலை வைத்தியர்களை உடன் இடமாற்றம் செய்யுமாறு, அமைச்சர் ராஜித உத்தரவு…

wpengine