உள்நாட்டு செய்திகள்

சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி…

வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு தொடருமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு?

wpengine

ஓய்வூதியம் பெறும் விவசாயிகள், மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சமலிடம் FCID வாக்குமூலம்..

wpengine