உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சில பிரதேசங்களுக்கு நாளை நீர் விநியோகம் தடை.

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளமையினால் நாளை காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, மொரோந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதனோடு கட்டுகுறுந்த, நாகொட, பென்தோட்ட, பாயாகல, மக்கோன, பேருவளை, களுவாமொதர, மோரகல்ல, தர்காநகர், அளுத்கமை மற்றும் பிலமினாவத்த போன்ற பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டெங்கு நோய் தொற்று காரணமாக யாழ். பல்கலை மருத்துவபீட மாணவரொருர் பலி – விஞ்ஞான பீடம் மூடல்…

wpengine

எரிபொருள் விலை நிர்ணயம் குறித்து இன்று(10) கலந்துரையாடல்….

wpengine

அரச அலுவலகங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தடை

wpengine