உலக செய்திகள்

சீனாவில் உரத் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 44 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|CHINA) சீனாவில் இரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 உயிரிழந்துள்ளதுடன், மேலும் 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் இரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தொழிற்சாலையில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொழிற்சாலைகளுக்குள் சிக்கித் தவித்த பலரை மீட்டனர். கடுமையாக போராடி இன்று அதிகாலையில் தீயை அணைத்தனர்.

இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதுடன், சுமார் 90 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

முடிவுக்கு வரும் ஹாரி – மேகன் மார்க்கல் பிரச்சினை

wpengine

100-வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியா…

wpengine

பேரூந்து – முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து – 13 பேர் பலி

wpengine