உலக செய்திகள்

சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|CHINA) சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் தின்கிங்யாபின் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்துக்குள் வெடிவிபத்து ஏற்பட்டதில், அதனை தொடர்ந்து சுரங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Related posts

சுகாதாரத்துறையின் எச்சரிக்கையை மீறி மொஸ்கோவின் முடக்கம் தளர்த்தப்பட்டது

wpengine

பிரான்ஸ் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்ட இளைஞர் கைது..

wpengine

கூகுள் Street View திட்டத்திற்கு இந்திய உள்விவகாரத்துறை அமைச்சகம் மறுப்பு

wpengine