உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீன உரக் கப்பல் விவகாரம் – முரண்பாடு தீர்க்கும் பொறுப்பு வெளிவிவகார அமைச்சிடம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சீன உரக்கப்பல் தொடர்பான முரண்பாடுகளை இரு நாடுகளினதும் நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாள்வதற்காக, அதனை வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

சீனாவின் கிண்டாவே சீவின் பயோடெக் நிறுவனத்தை இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அரசாங்கத்திடம் பரிந்துரைத்திருந்தார்.

சேதன பசளை பரிமாற்றம் தொடர்பான விடயங்களில் உரிய வகையில் செயற்பட்டிருக்காமையே இதற்கான பிரதான காரணமாகும்.

இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கைக்கான சீன தூதுவருடன் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

Related posts

ரணில் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு

wpengine

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen

அரநாயக்க மண்சரிவில் சிக்குண்டோரின் 9பேரின் இறுதிக் கிரியைகள் இன்று

wpengine