உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலையுடன் தென்மேற்கு பருவகாற்று காலநிலையும் கைகோருகிறது

தென்மேற்கு பருவகாற்று காலநிலை தற்போது இலங்கையில் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மேல், வடமேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீட்டர்வரை மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரயில் தண்டவாளத்தில் பயணித்தால் கைது செய்யப்படுவர் – ரயில்வே திணைக்களம்

wpengine

ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் நாளை ஆரம்பம்…

wpengine

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான விவாதம் நாளை…

wpengine