உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை மற்றும் வறட்சி – 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு…

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சீரற்ற காலநிலை மற்றும் வறட்சி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வறட்சி காரணமாக, 3,10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலைய பணிப்பாளர் சமிந்த பதிராஜ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாகவும் கடும் காற்று காரணாகவும் 2,045 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக, நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதனால், 2 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலைய பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐ.எஸ். இயக்கத் தலைவன் தலைக்கு 2.5 கோடி டாலர் – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு..

wpengine

கண்டியில் அதிர்வு : விசேட ஆய்வுகள்

wpengine

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை

News Editor