உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – வாகன போக்குவரத்து பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலகெடிஹேன பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கொள்கலன் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை காரணமாக இவ்வாறு வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் மாதம்பே பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மரமொன்று முறிந்து வீழ்ந்த காரணத்தால் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேலும் 9 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

முகக்கவசங்களுக்கு புதிய விலை

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் ரொஷானுக்கு உரித்தான வர்த்தக நிலையம் தீக்கரை..

wpengine