உள்நாட்டு செய்திகள்

சுகாதார ஆலோசனைகளை சில நிறுவனங்கள் மறுப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளை சில நிறுவனங்கள் பின்பற்றவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் அவ்வாறான நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய, நிறுவனங்களுக்குள் நுழையும் நபர்கள் தொடர்பான பதிவேடுகளை பராமரித்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை கழுவுவதற்கான இடமொன்றை ஒதுக்குதல், உடல் வெப்பத்தை பரிசோதித்து நிறுவனத்துக்குள் அனுமதித்தல் போன்ற விடயங்களைப் பின்பற்றுவது கட்டாயம் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த விடயங்கள் சில நிறுவனங்களில் பின்பற்றப்படுவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்

எனவே, நிறுவன பிரதானிகள், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்களைப் பின்பற்றுவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

சூதாட்ட ஷம்மியா, அமைச்சர் ரொஷானா முக்கியம் என்பதனை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்..!

wpengine

களனி, கம்பஹா பிரதேசங்களில்  ஞாயிறு நீர் விநியோகத்தில் தடை  

wpengine

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு: அமைச்சர்கள் சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

wpengine