Top Story 3உள்நாட்டு செய்திகள்

சுகாதார துறையினர் பணிப்புறக்கணிப்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, நாடு முழுவதும், 1, 103 வைத்தியசாலைகள் மற்றும் 365 சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை என்பனவற்றில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய பணிப்புறக்கணிப்பில் தமது சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்று விற்பனை நிலையங்களில் தீப்பரவல்…

wpengine

முரளி இன்றுடன் ஆஸி அணியினை கைவிட்டு ஹேரத்துடன் மணிக்கணக்கில் பேச்சுவார்த்தை

wpengine

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒத்திவைப்பு…

wpengine