உள்நாட்டு செய்திகள்

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மாலைதீவு ஜனாதிபதி விசேட அதிதி..

எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி கொண்டாடப் படவுள்ள 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். மாலைதீவு ஜனாதிபதியும் அவரது பாரியாரும் விசேட அதிதிகளாகப் பங்கேற்பார்கள் என அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.

பெப்ரவரி 3ம் திகதி இரவு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரித் பாராயணம் இடம்பெற வுள்ளதுடன், பிரதான வைபவத்துடன் இணைந்ததாக மாவட்ட மட்டத்திலும் சுதந்திர கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன என்றும் செயலாளர் கமல் பத்மசிறி கூறினார்.

Related posts

இன்று(22) நள்ளிரவு முதல் அவசர காலநிலை சட்டம் பிரகடனம்..

wpengine

நில அளவைத் திணைக்களம் அமெரிக்க நிறுவனத்தினத்திற்கு கைமாறும் சாத்தியம்..

wpengine

26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்…

wpengine