உள்நாட்டு செய்திகள்

சுத்தமான குடிநீர் விநியோகம் கிடைக்காவிடின் உடன் 117 அழையுங்கள்.

அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக, சுத்தமான குடிநீரை விநியோகிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அவ்வாறு சுத்தமான குடிநீர் விநியோகம் கிடைக்காவிடின், 117 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பை எடுத்து அறிவிக்குமாறும் அந்நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த இந்த இலக்கம், 24 மணிநேரமும் செயற்படும் என்றும் அறிவித்துள்ளது.  மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில், பல பிரதேசங்களில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையால், பவுசர்கள் மூலமாகவே சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது என்றும் அந்த மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் ஏற்பு காலம் நீடிப்பு

wpengine

மின் கட்டணத்தை 30% இனால் குறைக்க PUCSL கோரிக்கை

News Editor