உள்நாட்டு செய்திகள்

சுனில் ஹந்துன்நெத்தி பிணை முறி விநியோக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சி வழங்குவதற்காக கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி இன்று(08) முன்னிலையாகவுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 ஆம் திகதி ஆணைக்குழுவில் கோப் குழுவின் தலைவர் சாட்சி வழங்க அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அக்காலப்பகுதியில் அவர் வெளிநாடு சென்றிருந்தமையால் சாட்சி வழங்குதல் ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வழிகாட்டி வெளியீடு…

wpengine

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

wpengine

‘அதிஉயர் சபையில்’
மலையகத்தை மறந்த ‘முஸ்லிம் எம்.பிக்கள்’!
விவாதத்தில் அப்துல் அலீம் மட்டுமே உரை!!

wpengine