உள்நாட்டு செய்திகள்

சுமார் 60 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளை கொண்டுவந்த இந்தியப் பிரஜை கைது…

ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற ஒருவகை போதைப் பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(11) இரவு சென்னையில் இருந்து வந்த இந்தியப் பிரஜை ஒருவரே விமான நிலைய போதை தடுப்பு பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் பயணப் பொதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தப் போதைப் பொருட்களின் பெறுமதி சுமார் 60 இலட்சம் என்று பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.

சந்தேகநபர் இன்றையதினம் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.

Related posts

நீதிபதிகளுக்கு இந்தியாவில் ஐந்து நாள் பயற்சி.

wpengine

நடைபவனியில் ஈடுபடவோ, எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளவோ நான் யாருக்கும் அனுமதியளிக்கவில்லை.

wpengine

திஸர பெரேரா டெஸ்டில் இருந்து ஓய்வு

wpengine