வணிகம்

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் மூலம் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்…

இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டத்தை அமுலாக்கியுள்ளது. பல துறைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் உருவாகுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“டுக் டுக்” முச்சக்கர வண்டி சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமகால சுற்றுலாத்துறையின் முச்சக்கர வண்டிகளுக்கு உள்ள இடம் தவிர்க்க முடியாதது. இந்த வாகனங்களின் வகிபாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ருக் ருக் என்ற பெயரிலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 700 கோடி டொலர் வருடாந்த வருமானத்தை எதிர்பார்ப்பதாகவும், கடந்த ஆண்டு 400 கோடி டொலர் கிடைத்ததாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

30 ஆண்டுகள் வளர்ச்சியை கொண்டாடிய Whiteline Industries

Azeem Kilabdeen

நிலா காய்கிறது : 4,125 கோடி..!!!!!!!!! நிலாவுக்கு செல்ல ஒரு நபருக்கான கட்டணம்..!! – யம்மாடியோவ்

wpengine

பேலியகொட மீன் சந்தை ஆன்லைன் முறையில்

wpengine