உள்நாட்டு செய்திகள்

சுற்றுலா விசா மூலம் வருகை தந்து பணி புரிந்த 23 இந்தியர்கள் கைது..

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தொழிலில் ஈடுபட்டிருந்த 23 இந்திய பிரஜைகள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று(14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து கொழும்பில் தங்கியிருந்து பணி புரிந்த 23 இந்தியர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று(14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் ஜோதிடம் பார்கும் தொழில் செய்தமையும், மேலும் 9 பேர் ஆடை விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நாட்டில் இருந்து திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

 

 

-Rishma

Related posts

விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் மட்டு

wpengine

குடிநீர் கட்டணத்தை உயர்த்த யோசனை..!

wpengine

2017இல் இருந்து பொலித்தீன் பாவனைக்கு முற்றாகத் தடை…

wpengine