உள்நாட்டு செய்திகள்

சுவசெரிய இலவச அம்ப்யூலன்ஸ் சேவை கிழக்குமாகாணத்திலும்

(FASTNEWS|COLOMBO) கிழக்குமாகாணத்தில் ‘சுவசெரிய’ என்ற இலவச அம்ப்யூலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்காக தேவையான அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி இது தொடர்பான நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகர தரஞ்சித்சிங்சந்து தலைமையில் இன்று திகாமடுல்லையில் இடம்பெறவுள்ளது. மாகாணவைத்தியசாலைகளுக்காக 27அம்ப்யூலன்ஸ் வாகனங்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன.

அமைச்சர ஹர்ஷ டி சில்வாவின்கோரிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுவசெரிய அம்பியூலன்ஸ் இலவச சேவையின் இறுதிக்கட்ட அன்பளிப்பு இதுவாகும். இதன் முதற்கட்டத்தின்போது 88 அம்ப்யூலன்ஸ் வாகணங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 209அம்ப்யூலன்ஸ் வாகனங்களும் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் ஆரம்பம் (Update)

wpengine

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கை

wpengine

எரிபொருளை 250 ரூபாய்க்கு வழங்க முடியுமா?

wpengine