உள்நாட்டு செய்திகள்

சூரிய சக்தி மின் உற்பத்தி – தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்.

சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கான உபகரணங்களை வீடுகளில் பொருத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று(06) ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

பத்து இலட்சம் வீடுகள் திட்டத்தில் சூரிய எரிசக்தி மூலமான மின்சாரத்திற்கான உபகரணங்களை வீடுகளில் பொருத்தும் வேலைத்திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு தேவையான மின்சாரம் வழங்கப்படும்.

அத்தோடு இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தின் ஊடாக வருமானத்தையும் வீட்டு உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

தேவையான உபரகணங்களை பெற்றுக்கொள்ள வங்கிக்கடன் வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏழு வருடங்களில் இந்த கடனை செலுத்தக்கூடிய வகையில் மின்சார சபையும் மின் பாவனையாளர்களுக்கும் இடையில் 20 வருட உடன்படிக்கை கைச்சாத்திடப்படும். முதல் வருடத்தில் சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தியில் ஒரு அலகுக்கு 22 ரூபாவும் எதிர்வரும் 13 வருடங்களில் ஒரு அலகுக்கு 15 ரூபாவும்; வழங்க மின்சார சபை எதிர்பார்த்துள்ளது.

மூன்று கட்ட நடவடிக்கையின் கீழ் சூரிய ஒளி உபகரண கட்டமைப்பு உபகரணங்களை பெற்றுக்கொள்ள பாவனையாளர்களினால் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சூரிய ஒளி மின்னுற்பத்தி உபகரணங்களுக்காக தரச்சான்றிதழ் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக வர்த்மானி அறிவிப்பு ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படும்.

இன்று மாலை மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சூரிய ஒளியின் மூலமான மின்சார கட்டமைப்பு உபகரணங்கள் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்

wpengine

ஐ.நாவை உருக்கவைத்த இலங்கையின் சித்திரவதை

wpengine

பல்கலைக்கழக மாணவி கற்பழிப்பு – சந்தேக நபருக்கு 37 வருட கடூழிய சிறை

wpengine