Top Story 3உள்நாட்டு செய்திகள்

செம்மணியின் அகழ்வு பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவிருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்தன. குறித்த அகழ்வு பணிகளே இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழிகளில் முதல் கட்டமாக 9 நாளும் இரண்டாம் கட்டத்தில் 45 நாள் அகழ்வு செய்ய தீர்மானிக்கப்பட்டு இதுவரை 32 நாளும் என மொத்தமாக 41 நாள் அகழ்வு பணிகள் நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 140 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

Related posts

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது..

wpengine

எமில் ரஞ்சன் மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

மகனை பழிவாங்காது என்னை சிறையில் அடைத்திருக்கலாம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

wpengine