உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

சேயா சந்தொவ்மி கொலை – சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை (UPDATE)

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை விதித்து மீகமுவ நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்தார்.
சேயா சந்தொவ்மி கொலை – இறுதித் தீர்ப்பு இன்று
கொட்டதெனியாவில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து வயதான ஷேயா சௌதமி சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு இன்று(15)  வழங்கப்படவுள்ளது.

நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷமீபா ஜானகி ராஜரத்னவினால் குறித்த இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றங்களை தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி, சிறுமியை கடத்தி சென்றமை, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை, கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களே சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி குறித்த சிறுமி நித்திரையில் இருந்த சந்தர்ப்பத்தில் காணாமல் போயிருந்ததுடன், இரண்டு தினங்களுக்கு பின்னர் வீட்டிற்கு அருகிலுள்ள நீர்நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று 72 நாட்களின் பின்னர் சட்ட மாஅதிபரினால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், 166 நாட்களில் விசாரணைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டிருந்தன.

அத்துடன், 184ஆவது நாளான நாளை வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்

wpengine

ரணிலின் வழக்கு ஒக்டோபரில் மீண்டும்

Azeem Kilabdeen

அமுலாகும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்

wpengine