உள்நாட்டு செய்திகள்

சேவைப் புறக்கணிப்பினால் 15 லட்சம் கடிதங்கள் முடங்கின..

தபால் சேவை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள சேவைப் புறக்கணிப்பு காரணமாக நேற்று(20) நாடுமுழுவதும் 15 இலட்சம் கடிதங்கள் தேங்கிக் கிடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு மற்றும் ஊதியம் உள்ளிட்ட 7 விடயங்கள் குறித்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிபகிஸ்கரிப்பில் நாடுமுழுவதுமுள்ள தபால் சேவை ஊழியர்கள் ஈடுபட்டள்ளனர்.

இந்த நிலையில், நேற்று நாடுமுழுவதும் தபால் சேவை முடங்கியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலில் தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டே இந்த அடையாள பணிபகிஸ்கரிப்பில் தபால் சேவை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு இன்னும் 14 நாட்களுக்கு தீர்வு கிடைக்கவில்லையாயின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயார் என தபால் சேவை ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

Related posts

கண்டி கெடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயம்…

wpengine

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை மட்டு…

wpengine

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்

wpengine