உள்நாட்டு செய்திகள்

சைட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட மருத்துவமனைகளுக்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம்..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை தடை செய்ய வலியுறுத்தி 6 மாவட்டங்களின் மருத்துவமனைகளுக்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழு மற்றும் அவர்களின் பெற்றோர் சங்க உறுப்பினர்களே குறித்த இந்த சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, கொழும்பு, இரத்தினபுரி குருநாகல், கேகாலை, அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் மருத்துவமனைகளுக்கு முன்னால் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்.

மாத்தறை மருத்துவமனைக்கு முன்பாக கூடாரம் ஒன்று அமைக்க முற்பட்ட போது அதற்கு காவற்துறையினர் எதிர்ப்பு வெளியிட்டதாக மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்…

wpengine

எதிர்வரும் 03 மாதங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு வரவு செலவு திட்டம் வெள்ளியன்று…

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

wpengine