உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டமா அல்லது மாணவர்களா – அரசின் நிலைப்பாட்டிலேயே அரசின் இறுதியும் தீர்மானிக்கப்படும் – ஜேவிபி..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியினை பாதுகாக்க இந்நல்லாட்சி அரசு மாணவர்களை பலிக்காடாவாக பயன்படுத்துவதாக ஜேவிபி குற்றஞ்சாட்டி உள்ளது.

இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கருத்துத் தெரிவிக்கையில்;

“..சைட்டம் வேண்டுமா அல்லது மாணவர்கள் வேண்டுமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். சைட்டத்தை தெரிவு செய்து கொண்டு நடைமுறையை தீர்மானிக்க வேண்டும். அல்லது மாணவர்களின் பிரச்சினையை கவனத்தில் கொண்டு சைட்டத்தை கைவிட வேண்டும். மாணவர்களை கட்டுப்படுத்த ஆயுதத்தை கையில் எடுத்தால் அதுவே அரசாங்கத்தின் இறுதியாக அமையும்..” என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் நேற்று(18) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

மெழுகு உருவ நூதனசாலை திறப்பு

wpengine

திருகோணமலை, சண்முகா வித்தியாலய அபாயா சர்ச்சை – ஆசிரியை பஹ்மிதா ரமீஸுக்கு எதிராக அதிபரால் மேலும் இரண்டு புதிய வழக்குகள் பதிவு

News Editor

பாலியல் துஷ்பிரயோகம் : ஆசிரியர் கைது

wpengine