உள்நாட்டு செய்திகள்

சைட்டம் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் இன்று..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் இன்று(06) கொழும்பில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த இந்த போராட்டம் இன்று மாலை 06 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இடம்பெறும் இடம் குறித்து பிற்பகல் 12 மணியளவில் தெரிவிக்கப்படும் எனவும், பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹேமந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த சைட்டம் எதிர்ப்புப் போராட்டத்தில் இதுவரை பெற்றோர்கள் 250 பேர் தமது சுய விருப்பப்படி முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சர்வதேச முறையின் கீழ் நடாத்தவுள்ள குறித்த உண்ணாவிரதத்தில் முதல் கட்டமாக 05 பெற்றோர்கள் கலந்து கொள்வதாகவும் குறித்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

E – (rizmira)

Related posts

கொட்டாஞ்சேனை கொலைச் சம்பவம் மூவர் கைது

wpengine

நாட்டிற்கு எதிரான ரணிலின் இரகசிய திட்டத்தை, அம்பலப்படுத்தும் கம்மன்பில..!

wpengine

பக்கத்து வீட்டு பெண்ணைப் பார்த்து சிரித்த கணவரால் பூகம்பம்

wpengine