உள்நாட்டு செய்திகள்

சைட்டம் எதிர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டம் அதனை மூடும் வரையில் தொடரும்.. – GMOA..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு எதிராக நேற்று(21) காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட அரச வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டமானது இன்று(22) காலை 08.00 மணிக்கு நிறைவுக்கு வந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

சைட்டம் நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்த வாரங்களில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைய(21) பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்தாலும் மாலபே சைட்டம் நிறுவனத்தை மூடும் வரையில் போராட்டங்களை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

இலங்கை தேர்தலை இலக்கு வைத்து றோ உளவுப் பிரிவு

wpengine

சைட்டம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் என GMOA ஜனாதிபதியிடம் கோரிக்கை…

wpengine

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine