உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்த விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது – சபாநாயகர்..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்த விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இன்று(05) நடைபெறும் ஒருநாள் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற விவாதம் ஒன்றை கோரியிருந்தனர்.

எனினும், காலம் கடந்து கோரிக்கை விடுத்தமையினால் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அவை ஒத்தி வைப்பு விவாதமொன்றை கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.

எனினும் அவை ஒத்தி வைப்பு விவாதம் ஒன்றை கோருவதனால், விவாதம் நடத்தப்படுவதற்கு ஒரு தினம் பகல் 12 மணிக்கு முன்னதாக கோரப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன காலம் கடந்தே இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விவாதம் வழங்கப்படாமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை மீறலாகும் என தினேஷ் குணவர்தன மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

(rizmira)

Related posts

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை – வளிமண்டலவியல்..

wpengine

இலங்கையில் சினோபெக் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்..!

wpengine

சீனாவுடன் இணைந்து பயணிப்பதே எமது எதிர்பார்ப்பு – அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ..

wpengine