உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் அவரது தந்தையான 78 வயதுடைய முதியவர் விசாரணைகள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டு நேற்று புதன்கிழமை (12) கிளிநொச்சி நீதி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது நேற்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 10 வயதுடைய மகளை அடித்து துன்புறுத்தியும், பூவரசம் தடியினால் தாங்கியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்றும் சிறுமியின் வாக்கு மூலம், சாட்சியங்கள், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் மன்று குறித்த முதியவரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்போது எதிரி சார்பாக ஆஜரான சட்டத்தரணி குறித்த குற்றவாளியானவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் மன்றுக்கு விண்ணப்பம் செய்திருந்தமையினை கவனத்தில் எடுத்த மன்று குறித்த குற்றவாளிக்கு சிறைச்சாலையில் வைத்திய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இவ்வாறு தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 79 வயதுடைய தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் இபத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரணசிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

wpengine

ஜே. ஸ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல்

News Editor

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine