உள்நாட்டு செய்திகள்

சொய்சா படுகொலையுடன் மேலும் ஒருவர் கைது

அனுராதபுரம் இரவு விடுதி உரிமையாளர் மற்றும் கராத்தே ஆசிரியரான வசந்த சொய்சா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த சந்தேகநபர் அனுராதபுரம் – தகய்யாகம பிரதேசத்தில் வைத்து கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இவரை இன்று அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கொலையுடன் தொடர்பான சந்தேகநபர் 34 வயதான ஒருவர் என்பதோடு, கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படும் லொரியின் சாரதி எனவும் தெரியவந்துள்ளது.

இதன்படி வசந்த சொய்சாவின் கொலை தொடர்பில் இதுவரை 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு இவர்களில் 27 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சைட்டம் குறித்து ஒரு வாரத்தினுள் தீர்மானம் வேண்டும் – அரசுக்கு GMOA சிவப்பு சமிஞ்சை….

wpengine

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கிய நாமல்!

wpengine

ஊடக ஓழுக்க விதிமுறைகளை மீறினால் அரசு நடவடிக்கை – அரச தகவல் திணைக்களம்

wpengine