உலக செய்திகள்

சோமாலியாவில் கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு

(FASTNEWS-SOMALIA) சோமாலியா தலைநகரில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

சோமாலியா நாட்டில் ஆளும் அரசை நீக்கி விட்டு இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்ய அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் மொகடிஷூவில் மக்கா அல் முக்காரமா சாலையில் நேற்று வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர்.

இதில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்தனர்.

அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகின. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு..

wpengine

ஜப்பான் நாட்டில் கழிவு நீர் கால்வாய்; வண்ண மீன்கள் [VIDEO]

wpengine

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு…

wpengine